அச்சச்சோ! இனி கொளுத்த போகுது வெயில்! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை !!
அச்சச்சோ! இனி கொளுத்த போகுது வெயில்! வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை !!;
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கி கொளுத்தி வருகிறது. அண்மையில் சில இடங்களில் மழை பெய்த போதும் மீண்டும் 100 பாரான்ஹீட் டிகிரி அளவை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில், த மிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை அடுத்த 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மற்றும் கர்நாடகாவில் இருந்து தெற்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஏப்., 29 முதல் மே 2 வரை, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக உள் மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 3 நாட்களுக்கு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியதை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில், ஆண்டிப்பட்டி, சிவலோகம் பகுதிகளில் தலா 2 செ.மீ., கோவில்பட்டி, கள்ளிக்குடி, ஆலங்குடி, வேதாரண்யம் பகுதிகளில் தலா ஒரு செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்
Newstm.in