அதிர்ச்சி! 10ம் வகுப்பு மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை!
அதிர்ச்சி! 10ம் வகுப்பு மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை!
பிரிட்டனில் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்கிங்காம்ஷியரை சேர்ந்த காண்டீஸ் பார்பர் (35) என்ற பள்ளி ஆசிரியைக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவர் தனது பள்ளியில் பயிலும் 15 வயது மாணவன் மீது ஆசை கொண்டதாக தெரிகிறது. அதனால் அவன் மீது தனி அன்பு செலுத்த ஆரம்பித்தார்
அதனைத் தொடர்ந்து ஒரு நாள் அந்த மாணவனின் செல்போனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பினார். பிறகு போட்டோ, வீடியோ அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்த அவர் மாணவனுடன் தனிமையிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஆதாரத்துடன் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் மாணவரிடம் இருந்த மெசேஜ்கள், புகைப்படங்களை அழிக்க சொல்லி வலியுறுத்தியிருக்கிறார் அவர். தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் மாணவனிடம் அவர் கூறினார்.
இந்நிலையில் ஆசிரியையின் செயல்கள் வெளியில் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் 16 வயதுக்கு உட்பட்ட சிறாரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்துக்கா தனியாக 16 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in