நடுரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஆசிரியை! வைரலாகும் வீடியோ!
மேற்கு வங்கத்தில் அடாவடி.. கயிறு கட்டி ரோட்டில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட ஆசிரியை..
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஆசிரியை ஸ்மிரிகோனா தாஸ் என்பவர் வீட்டு முன் அமைக்கப்படும் சாலை 12 அடி அகலமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதற்காக அவர் நிலத்தை விட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால் சாலையை 24 அடிக்கு அகலப்படுத்த முடிவு செய்த போது அதற்கு ஸ்மிரிகோனா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் அமல் சர்கார் என்பவர் தலைமையிலான கும்பல் ஆசிரியை ஸ்மிருதிகோனா தாசை முழங்காலில் கயிறை கட்டி ரோட்டில் இழுத்து சென்றனர்.
அதை தடுக்க வந்த அவரது சகோதரி சோமா தாசையும் அந்த கும்பல் தரதரவென் இழுத்து சென்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அர்பிதா கோஷ், பஞ்சாயத்து தலைவர் அமல் சர்க்காரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இது வரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. தற்போது இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர். இது தொடர்பான புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை மட்டுமே நடத்தி வருகின்றனர்.
newstm.in