வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனருக்கு வந்த சோதனை..!!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனருக்கு வந்த சோதனை..!!
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில்,அவர் பதிவிட்ட பதிவில், "வணக்கம் நண்பர்களே.. என் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கப்பட்டு சில பேரிடம் பணம் கேட்பதாக அறிந்தேன்.யாரும் நம்ப வேண்டாம் அந்த அக்கவுண்டின் லிங்கை கீழே பதிவு செய்துள்ளேன் பிரண்ட் ரெக்வஸ்ட் வந்தால் அதை யாரும் ஏற்க வேண்டாம்.. பரிச்சயமான விவரமின்றி வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள் என பதிவிடப்பட்டுள்ளது.