திருமணமான புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. பதறியடித்து ஓடிய தந்தை, உறவினர்கள் !!
திருமணமான புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. பதறியடித்து ஓடிய தந்தை, உறவினர்கள் !!
திருமணமான ஐந்தே மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி பெரிய கடை வீதி வரதராஜ பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார். இவரும், சினேகா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதல் கைகூடியது. அதாவதும் காதலர்களான இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. பிரச்னை முற்றிய நிலையில், விஜயகுமார் கடந்த வாரம் தனது சொந்த ஊரான புள்ளம்பாடிக்குச் சென்று தாய்வீட்டில் இருந்துள்ளார்.
அதன்பின்னர் தனது மனைவியை பார்க்க வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் இன்று காலை விஜயகுமாரை தொடர்புகொண்ட அவரது மனைவி சினேகா, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்த சினேகாவின் தந்தைக்கும், உறவினர்களுக்கும் விஜயகுமார் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சினேகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சினேகா, குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வரதட்சணை கொடுமையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in