ட்விட்டரில் ட்ரெண்டான #Airtel என்ற ஹேஷ்டேக்.. வாடிக்கையாளர்கள் கடும் அவதி !
ட்விட்டரில் ட்ரெண்டான #Airtel என்ற ஹேஷ்டேக்.. வாடிக்கையாளர்கள் கடும் அவதி !
இந்தியாவில் முக்கிய நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் உள்ளது. தமிழகத்தில் ஏராளமான நெட்வொர்க் சேவைகள் இருந்தப்போது வந்த பிறகு ஒன்றன் ஒன்றாக நிறுவனங்கள் அடிவாங்கின. எனினும் ஏர்டெல் நிறுவனம் மட்டும் தற்போது வரை களத்தில் நின்று போராடி வருகிறது. தமிழகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனம்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் முதல் ஏர்டெல் பயனாளர்களுக்கு ஏர்டெல் நெட்வொர்க்கில் இணைய சேவை மட்டுமன்றி அலைபேசி சேவையும் முடங்கி இருந்தது. இதனால் அந்நிறுவனத்தின் பயனாளர்கள் அவதியுற்றுள்ளனர். இதனையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஏர்டெல் தொழில்நுட்ப குழுவினர் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஏர்டெல் கேர்ஸ் ட்விட்டரில் அளித்த பதிலில், எங்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல சேவைகள் முழுமையாக கிடைக்காமல் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. அவர்கள் ட்விட்டரில் #Airtel என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் பிரச்னையை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து #Airtel என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
newstm.in