பள்ளத்தில் கவிழ்ந்த லாரி... பிறந்தநாள் விழாவுக்கு சென்ற 12 பேர் பலியான பரிதாபம் !
பள்ளத்தில் கவிழ்ந்த லாரி... பிறந்தநாள் விழாவுக்கு சென்ற 12 பேர் பலியான பரிதாபம் !
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் வசிக்கும் பிரேந்திர சிங் பாகேல் என்பவர் தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்தினர், உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டார். இதற்காக லக்னோவில் உள்ள கல்கா தேவி கோவிலுக்கு தனது குடும்பத்தினர் 70 பேரை லாரியில் அழைத்து சென்றார்.அனைவரும் லாரியில் அமர்ந்து பாட்டுபாடியவாறு சென்றுகொண்டிருந்தனர்.
அந்த லாரி எட்டாவா மாவட்டத்தில் உள்ள உடி கிராசிங் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது கோரவிபத்தில் சிக்கியது. அதாவது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. விபத்தினால் ஏற்பட்ட சத்தம் மற்றும் அதில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் அங்கு விரைந்தனர்.
எனினும் இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 43 பேரை அப்பகுதியினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
newstm.in