சொன்னதை செய்த அமெரிக்கா.. வேட்டை தொடங்கியது: ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ட்ரோன் தாக்குதல் !!
சொன்னதை செய்த அமெரிக்கா.. வேட்டை தொடங்கியது: ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது ட்ரோன் தாக்குதல் !!
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்க ராணுவம்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மீட்டு வருகின்றன. ஆப்கான் மக்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக, காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்கும் வகையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பின் கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா. ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு அனைவரும் வெளியேறிய பின் அமெரிக்கா கடுமையான தாக்குதலை முன்னெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in