காவலரை தாக்கி செல்போனை உடைத்த மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ வைரல்..!!

காவலரை தாக்கி செல்போனை உடைத்த மாநகராட்சி உதவி பொறியாளரின் வீடியோ வைரல்..!!

Update: 2022-01-18 12:55 GMT

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியே சுற்றுபவரை கண்காணித்து வழக்குபதிவு செய்ய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று மாலை காசி தியேட்டர் அருகே உள்ள காசி எஸ்டேட் 2-வது தெருவில் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். 

விசாரணையில் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை உதவி பொறியாளராக பணிப்புரிந்து வரும் வாழவந்தான் என்பதும், இவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இவர்களிடம் காவலர் சிவகிருஷ்ணன் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தி உள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த உதவி பொறியாளர் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை காவலர் சிவகிருஷ்ணன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ய, மேலும் ஆத்திரமடைந்த மாநகராட்சி உதவி பொறியாளர் காவலரை தாக்கியதுடன் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்து தகராறில்  ஈடுபட்டுள்ளார். 

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News