கணவன் தலையை வெட்டி எடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற மனைவி!!

கணவன் தலையை வெட்டி எடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற மனைவி!!

Update: 2022-01-21 08:15 GMT

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான பிரச்னையில் மனைவி தனது கணவனின் தலையை வெட்டி பையில் வைத்து காவல் நிலையம் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவிசந்த்சூரி (55), வசுந்தரா, (45) தம்பதியினருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்களுக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த மனைவி, இதுபற்றி பேசி கண்டித்திருக்கிறார். இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் கள்ளத்தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்றார் வசுந்தரா.

கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார். பின்னர் கணவனின் தலையை  பையில் போட்டு கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார்.

கணவனின் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கள்ளத்தொடர்பு காரணமாக கணவனை கொலை செய்தேன் என்று அவர் கூறினார்.

வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மனநிலை சரியில்லாத அந்த மகன் ஆதரவற்று நிற்கிறார்.

newstm.in

Similar News