கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்! நடுரோட்டில் கணவனை கிழித்து தொங்க விட்ட மனைவி!
கள்ளக்காதலியுடன் தனிக்குடித்தனம்! நடுரோட்டில் கணவனை கிழித்து தொங்க விட்ட மனைவி!
காதல் திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர், பிறகு வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அதனை அறிந்த மனைவி இருவரையும் அடித்து வெளுத்து எடுத்து விட்டார்.
தெலங்கானா மாநிலம் பத்ராதரி கொத்தாகுடம் பகுதியை சேர்ந்த ராஜா பாய் என்பவர் கேபிள் ஆப்ரேட்டராக உள்ளார். இவரும் அவரது மனைவியும், 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 11 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
திருமணத்தின் போது ராஜா பாய் வீடு, பணம் என வரசட்சணை பெற்றதாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ராஜா பாய் சரியாக வீட்டுக்கு வராததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
அப்படி மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு செல்லும் அவர் அதே பகுதியில் திருமணமாகாத பெண் ஒருவருடன் வீடு எடுத்து வசித்து வந்தார். அதுகுறித்து ராஜா பாயின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் உறவினர்களுடன் தனது கணவர் குடும்பம் நடத்தி வரும் வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவரது கணவரையும், அந்த பெண்ணையும் எல்லோரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். மாலை வீட்டுக்கு சென்ற அவர்கள் இரவு வரை அனைவரையும் அடித்துமுடித்துவிட்டு அதன்பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in