லோன் கேட்ட கட்சியின் பெண் பிரமுகரை லாட்ஜுக்கு தூக்கிச் சென்ற கவுன்சிலர்.. கணவரிடம் கதறிய பெண்
லோன் கேட்ட கட்சியின் பெண் பிரமுகரை லாஜிக்கு தூக்கிச் சென்ற கவுன்சிலர்.. கணவரிடம் கதறிய பெண்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளூர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர கட்சி தொண்டர்கள், பெண் பிரமுகர்களும் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்பு பெண் பிரமுகர் ஒருவரை சந்தித்து அப்பகுதி கவுன்சிலர் பேசினார். அப்போது பணம் தேவைப்படுவதை கூறிய பெண் பிரமுகரிடம் தனக்கு தெரிந்த ஒரு குழுவில் லோன் வாங்கி தருகிறேன் என கவுன்சிலர் உறுதி அளித்துள்ளார்.
பெண் பிரமுகரிடம் லாட்ஜுயில் தான் கூட்டம் என்று சொல்லி உள்ளே அழைத்தார் கவுன்சிலர். உள்ளே சென்றதும் கவுன்சிலரின் விஷமத்தை அறிந்த பெண் பிரமுகர் அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்தார். தக்கலைக்கு வந்து சேர்ந்த அவர் நடந்த விஷயத்தை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரனிடமும் சென்று புகார் அளித்தனர். சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலரை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
newstm.in