மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்... தேடும் பணி தீவிரம்

மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்... தேடும் பணி தீவிரம்

Update: 2021-02-22 17:52 GMT

வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் விடிய விடிய கொட்டிய கனமழை 19 செண்ட்டி மீட்டராகப் பதிவானது. நகரப் பகுதிகளான கோரிமேடு புதிய பேருந்து நிலையம், காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் கிராம பகுதிகளான பாகூர் வில்லியனூர் அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. வீட்டு உபயோகப் பொருட்களும் நீரில் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் அவதிக்கு உள்ளாகினர்.

சண்முகாபுரம் பகுதியில் உள்ள வெள்ளவாரி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில், மீன் மார்க்கெட் அருகே ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. அவரை தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் பெயர் ஹசினா பேகம் (35) என்பதும், வெள்ளவாரி ஓடை அருகே அவர் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.

Tags:    

Similar News