துர்நாற்றம் வீசியதால் காதலனுடன் சிக்கிய பெண்.. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த கிராமம் !

துர்நாற்றம் வீசியதால் காதலனுடன் சிக்கிய பெண்.. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த கிராமம் !

Update: 2021-12-26 11:02 GMT

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனி பகுதியில் சேதுபதி (33)- பிரியா (30) தம்பதி வசித்து வருகின்றனர். மதுபழக்கம் கொண்ட சேதுபதி வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்துவைத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீட்டில் பிரியாவும் இளைஞர் ஒருவரும் இருந்துள்ளனர். அவர்கள், வீட்டில் இருந்து தண்ணீர் பேரலை வெளியே தூக்கிக் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. பக்கத்து வீடுகளில் தூங்கியவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து விசாரித்தனர். அப்போது பிரியாவும் அந்த இளைஞரும் முன்னுக்குபின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்து போலீசார்  விசாரணை நடத்தினர். அப்போது பேரலில் சேதுபதியின் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது. பேரலோடு சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரியாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). கட்டிட தொழிலாளியான இவருக்கு  திருமணம் ஆகவில்லை.

பிரியாவின் குழந்தைகளை பார்க்க சதீஷ்குமார் அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. வீட்டில் சேதுபதி இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், சதீஷ்குமாருடன் செல்ல பிரியா தயாரானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி சேதுபதி குடிபோதையில் பிரியாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சதீஷ்குமார் அங்கு வந்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, சதீஷ்குமாரும் பிரியாவும் சேர்ந்து சேதுபதியை கட்டை மற்றும் கல்லால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிர் இழந்துள்ளார். சடலத்தை மறைக்க வீட்டில் இருந்த தண்ணீர் பேரலில் போட்டு மூடி வைத்துள்ளனர். ஒரு வாரமான நிலையில் பேரலில் இருந்த உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.

இதனால் யாருக்கும் தெரியாமல் உடலை வெளியே கொண்டு சென்று வீச முடிவு செய்தனர். அப்போது வெளியே எடுத்துச்சென்றப்போது போலீசில் சிக்கிக்கொண்டனர் என்பது தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் சதீஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News