தனது வீடியோவை ஆபாச இணையதளத்தில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

தனது வீடியோவை ஆபாச இணையதளத்தில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

Update: 2022-01-31 11:06 GMT

தானும், தனது காதலியும் தனியாக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று ஆபாச இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர் ஒருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையடம் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு ஆஸ்டின் நகர் பகுகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் இத்தகைய புகாரை அளித்துள்ளார். அந்த இளைஞர் ஒரு பிபிஓ (BPO) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர் புகார் அளித்ததை அடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தானும், தனது காதலியும் சில வாரங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அதை வீடியோ பதிவு செய்து சிலர் இணையத்தில் அப்லோட் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 21ஆம் தேதி வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட விவகாரம் அந்த நபருக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதே வீடியோ வேறு சில ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில் இருவரின் முகமும்  மறைக்கப்பட்டுள்ளதாகவும்,  அதில் இருக்கும் நபரின் மார்பு பகுதியில் உள்ள அடையாளத்தை வைத்து, அந்த இளைஞர் அது தாம் தான் என்று புகார் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ பல்வேறு கோணங்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது போல் இருப்பதாகவும், அதனால் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News