இளம்பெண்ணிடம் முத்தம் கேட்டு ஆசையாசையாய் சென்ற வாலிபர்! லாட்ஜ்ஜில் நடந்த ட்விஸ்ட்!

இளம்பெண்ணிடம் முத்தம் கேட்டு ஆசையாசையாய் சென்ற வாலிபர்! லாட்ஜ்ஜில் நடந்த ட்விஸ்ட்!

Update: 2021-05-16 09:52 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி எஸ்.பி. ஐ காலனியை சேர்ந்தவர் இளைஞர் மகேஷ். அவருக்கு கடந்த வாரம் ராங் கால் ஒன்று வந்தது. எதிர்முனையில் இளம்பெண் ஒருவர் பேசி உள்ளார். ஆனால் தவறான எண் என்பதை அறிந்த இளம்பெண் உடனே போன் இணைப்பைத் துண்டித்தார். 

இதனிடையே அந்தப் பெண்ணின் எண்ணைப் பதிவு செய்து கொண்ட மகேஷ் அவருக்குத் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஒரே ஒரு முத்தம் கொடுத்து விட்டால் தான் விட்டு விடுவதாகக் கூறியுள்ளார்.

நிலைமை வேறு மாதிரி போவதை உணர்ந்த இளம்பெண், மகேஷின் தொல்லை தாங்க முடியாமல் நடந்ததை தனது அண்ணனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அண்ணன், மகேஷுக்குப் பாடம் கற்பிக்க திட்டமிட்டார். தனது சகோதரர் கூறியபடி, மகேஷை மதனப்பள்ளியில் உள்ள லாட்ஜில் குறிப்பிட்ட எண்ணுள்ள அறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் இளம்பெண்.

இதனை நம்பிய மகேஷும் ஆசை ஆசையாக, அந்த லாட்ஜுக்கு சென்ற போது அறையில் நடந்தது கும்மாங்குத்து. அதாவது அறையில், இளம்பெண்ணின் அண்ணன், 5 ரவுடிகளுடன் காத்திருந்தார்.

முழு போதையில் இருந்த அந்தக் கும்பல், மகேஷை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். மேலும் அதை தங்கள் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துக் கொண்டனர். 

ஒரு கட்டத்தில் மகேஷ் அழுதபடி கெஞ்சவும், அந்த ரவுடி கும்பல் அவரை விட்டு விட்டது. அடி வாங்கியதை மகேஷ் வெளியில் சொல்ல முடியாமல் தவித்த நிலையில், ரவுடிக் கும்பல் தாங்கள் பதிவு செய்த வீடியோவை நண்பர்களிடையே பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி போலீசார் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மகேஷிடம் புகார் எழுதி வாங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News