அட்ரஸ் கேட்பது போல் நடித்து மார்பை பிடித்த இளைஞர்.. பாடம் புகட்டிய இளம் பெண் ! வைரலாகும் வீடியோ !!

அட்ரஸ் கேட்பது போல் நடித்து மார்பை பிடித்த இளைஞர்.. பாடம் புகட்டிய இளம் பெண் ! வைரலாகும் வீடியோ !!

Update: 2021-08-02 18:40 GMT

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அப்படி தனக்கு நடந்த சம்பவத்தை உடனே வெளிச்சத்திற்கு கொண்டுவந்து குற்றவாளிக்கு தக்க பாடம் புகட்டியுள்ளார் அசாமைச் சேர்ந்த இளம் பெண் பாவனா காஷ்யப். 

அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பாவனா காஷ்யப், மாலையில் ஒதுக்குப்புறமான சாலையில் வழக்கம்போல் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் இருந்தவாரே அவரிடம் வழிகேட்டிருக்கிறார். அந்த இளைஞர் கேட்ட விலாசம் தனக்கு தெரியாது எனவும் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் என அவர் கூறியிருக்கிறார். அந்த சமயம் திடீரென பாவனா காஷ்யப்பின் மார்பகங்களை தொட்டு மிகவும் அறுவறுப்பான முறையில் அந்த இளைஞர் நடந்து கொண்டிருக்கிறார் அந்த நபர்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த பாவனா திகைத்துபோனார். எனினும் அடுத்த நிமிடமே உஷாரானா அப்பெண் குற்றவாளியை தப்பிக்கவிடாமல் பார்த்துக்கொண்டார். அதாவது அவர் பைக்கில் சென்றப்போது பிடித்து மேலே தூக்கியுள்ளார். மேலும் பைக்கின் சாவியை பறித்துக்கொண்டார். மேலும் சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். தனது ஸ்கூட்டி சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால் அந்த நபரால் உடனடியாக அங்கிருந்து தப்ப முடியாமல் போனது. வேறு வழியில்லாமல் அவர் அங்கே சிக்கிக்கொண்டார்.
 
இதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பாவனாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இது தொடர்பான வீடியோ, புகைப்படத்துடன் தனக்கு நடந்ததை பாவனா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த நபரின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும் அவர் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுவிடுமாறும் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மதுசனா ராஜ்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தார்.
ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். அதேநேரத்தில் அப்பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். 


newstm.in


 

Tags:    

Similar News