பள்ளி மாணவியை கடத்திய இளைஞர்.. சுற்றிவளைத்த போலீசார்.. பகீர் பின்னணி !!
பள்ளி மாணவியை கடத்திய இளைஞர்.. சுற்றிவளைத்த போலீசார்.. பகீர் பின்னணி !!
பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் தேவாரம் சுற்றுப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் மாணவியின் தோழி வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை,
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசக்தி பாண்டியன் (23) என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்ததாகவும், ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் மாணவியை கடத்திச்சென்ற சிவசக்தி பாண்டியனை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டனர். சிவசக்தி பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். மாணவியை இளைஞர் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in