இவைதான் ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள்!!

இவைதான் ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள்!!

Update: 2021-12-22 06:15 GMT

ஒமைக்ரான் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அதன் பொதுவான அறிகுறி தொண்டை வலி என தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரானால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு ஆரம்ப கட்டத்தில் தொண்டை வலி பிரதானமான அறிகுறியாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

மேலும் தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 3 முதல் 10ஆம் தேதி வரை பிரிட்டனில் ஒமைக்ரான் பாதித்தோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், தலைவலி, சோர்வு, 'முக்கியமாக' குளிர் போன்ற அறிகுறிகள் பிரதானமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

மூக்கு ஒழுகுதல், தலைவலி, சோர்வு (லேசான அல்லது கடுமையானது), தும்மல் மற்றும் தொண்டை புண் அல்லது வலி ஆகியவை தான் ஒமைக்ரானின் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்டாவுக்கும், ஒமைக்ரான் தொற்றுக்குமான அறிகுறிகள் ஒவ்வொன்றுக்கும் இடையே மாறுதல்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். டெல்டா பாதிப்பில் வாசனை, சுவை தெரியாமல் போவது, காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சோர்வு போன்றவை அறிகுறிகளாக இருக்கிறது.

எனவே, மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் அது கொரோனாவாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News