உருமாறிய கொரோனா ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள் இவை தான்!

உருமாறிய கொரோனா ஏற்படுத்தும் புதிய அறிகுறிகள் இவை தான்!

Update: 2021-04-14 16:27 GMT

உலகம் முழுவதும் கொரோனா அசுர வேகம் எடுத்து பரவி மிகபெரிய பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது.அனைத்து நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்து செயல்படுத்தி வருகின்றன. இருந்த போதிலும் பல நாடுகளில் உருமாறிய கொரோனா கொத்து கொத்தாக பரவி வருகிறது. 

உருமாறிய கொரோனாவின் அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.  பொதுவாக எந்த வகை வைரசாக இருந்தாலும் அது பரவிய இடங்களுக்கு ஏற்றாற் போல  தன்னைத்தானே உருமாற்றிக் கொள்ளும். அத்துடன் தனது வீரியத்தை அதிகரித்துக் கொள்ளும் திறன் வாய்ந்தது. .அதுபோலவே  கொரோனா வைரசும்  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில்  தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டு வலம் வருகிறது.இந்தியாவில் கூட ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக உருமாறி இருக்கிறது.

இந்த வைரஸ்கள் ஏற்கனவே இருந்த வைரஸ்களை விட தொற்று திறன் அதிகம் கொண்டதாக உள்ளன. இதனால்தான் 2வது அலை தீவிரமாக ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல், வாசனை அறியும் திறன் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கின்றன. 

உருமாறிய வைரஸ்கள் வாய் பகுதிக்குள் எளிதாக தொற்றி  பற்குழி, பல் இடுக்கு, நாக்கு பகுதி, தொண்டையில் இருந்து பல்கி பெருகுகின்றன. இதனால் வாய் துர்நாற்றம், வாய்ப்புண், தாடை பகுதியில் எரிச்சல், தொண்டைப்புண், நாக்கில் வீக்கம், வெடிப்பு, நாவறட்சி, வாய் உலர்தல், எச்சில் உற்பத்தி குறைவு, அலர்ஜி , உடல் சோர்வு, தலை சுற்றல், உடல் வலி ஏற்படலாம்.

உடல் பலவீனப்படுதல், தடுமாற்றம், அதிக தாகம்  குமட்டல், உடல்வலி, தசையில் ஒருவித வலி, உடல் வீக்கம், தசை எரிச்சல், மூட்டுவலி, திடீர் வயிற்றுப்போக்கு, சோம்பல் ஆகியவை ஏற்பட்டால் ஒருவேளை அது  புதிய வைரஸ் தாக்கமாக  இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News