கொரோனா 3ஆவது அலையில் இவர்களெல்லாம் தான் உயிரிழந்தவா்கள்... அமைச்சா் கவலை !!
கொரோனா 3ஆவது அலையில் இவர்களெல்லாம் தான் உயிரிழந்தவா்கள்... அமைச்சா் கவலை !!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் சிறப்பு முகாமில் செலுத்தப்பட்டது.
அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்தும் மக்கள் வருகை குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் பேசியப்போது, இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் 50 ஆயிரம் முகாம்கள் தொடா்ந்து 18 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா்.
மூன்றாம் அலையில் இருந்து காத்துக் கொள்ள இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது. சென்னை ஐஐடி நிா்வாகம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கொரோனாவை கண்டறியும் வகையில் நவீன நடமாடும் பரிசோதனை வாகனத்தை உருவாக்கி அரசுக்கு அா்ப்பணித்துள்ளனா், என அவர் கூறினார்.
newstm.in