பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகள் இவை தான்!!
உலகமகளிர் தினத்தை முன்னிட்டு 80 நாடுகளில் உள்ள 9,000 பெண்களிடம் உங்களுக்கு பிடித்த நாடு எது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை எந்த நாட்டில் இருந்தால் உணர்வீர்கள், பொருளாதாரம், சமமாக நடத்துவது ஆகியவைகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
என்ன தான் உலகில் பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள் என்று கூறினாலும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ஒரு அடிமை போல் நடத்துவது என்பது தற்போதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
உலகமகளிர் தினத்தை முன்னிட்டு 80 நாடுகளில் உள்ள 9,000 பெண்களிடம் உங்களுக்கு பிடித்த நாடு எது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை எந்த நாட்டில் இருந்தால் உணர்வீர்கள், பொருளாதாரம், சமமாக நடத்துவது ஆகியவைகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மொத்தம் 10 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. மதிப்பெண்கள் அடிப்படையில் பெண்கள் மொத்தம் 21 நாடுகளை தேர்வு செய்துள்ளனர். முதல் இடத்தில் டென்மார்க்கும், இரண்டாவது இடத்தில் சுவீடனும், மூன்றாவது இடத்தை நார்வேயும் பிடித்துள்ளது. பெண்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடுகளாக 21 நாடுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த 21 நாடுகள் இவை தான்..
டென்மார்க், சுவீடன், நார்வே, நெதர்லாந்து, பின்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி, லக்ஸ்சம் பெர்க், ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ், அயர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஸ்பேயின், இத்தாலி, பேர்ச்சுகல், போலாந்து ஆகிய நாடுகள் பாதுகாப்பான நாடுகள் என பெண்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த லிஸ்ட்ல இந்தியா இல்லையான்னு எல்லாம் கேட்க கூடாது. நம்ம நாட்லேயும் தான் கணக்கெடுத்தாங்க... ஆனா இந்தியா லிஸ்ட்ல வரலை.. தினமும் பேப்பரைப் பார்த்தா நம்ம நாட்ல பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குன்னா சொல்றீங்க...?
எப்பவோ பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயா விஷயத்துலேயே இன்னமும் தூக்கு தண்டனைக் கைதிகள் தப்பிச்சுக்கிட்டே இருக்காங்க... அதனால, நம்ம நாடு பெண்களுக்கு பாதுகாப்பான நாடா இல்லையான்றதை உங்க சாய்ஸ்க்கே விட்டு விடுகிறேன்.. கமெண்ட்ல சொல்லுங்க..?!
newstm.in