பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்..!!

பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்..!!

Update: 2022-01-14 05:30 GMT

சூரியனுக்கும், இயற்கைக்கும், கால்நடைக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதே தை பொங்கல். முதலில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கலும், மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கலும், மூன்றாம் நாள் சொந்தங்களுடன் நேரம் செலவிட காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.

14ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 6.00 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். பிற்பகல் 02.30 மணி முதல் 3 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05.00 - 06.00 வரையும் பொங்கல் வைக்க நல்ல நேரம் உள்ளது.

இந்நிலையில் இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரமாக குறிப்பிட்டிருப்பது என்னவென்றால்,  காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் புதுப்பானையில் அல்லது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாம். பொங்கல் வைக்க சிறந்த நேரமாக இது கணக்கிடப்பட்டுள்ளது.

தை திருநாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்புவார்கள்.
 

Similar News