கொரோனாவில் தப்பிக்க இதை செய்தால் போதும்.. சித்தா எளிய மருத்துவ விளக்கம் !!
கொரோனாவில் தப்பிக்க இதை செய்தால் போதும்.. சித்தா எளிய மருத்துவ விளக்கம் !!;
கொரோனா வைரஸின் தீவிரம் மிக வேகமாக இருப்பதால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருவதால் மருத்துவதுறை அதனை சரிசெய்ய போராடி வருகிறது. அதேநேரம் பலரும் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவை நல்ல பலன் அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சுவாமிநாதன் எளிமையான வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, காலையில் இஞ்சி, மஞ்சள் தலா ஒரு துண்டு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லியாக வற்றச்செய்து குடிக்கலாம். இது உடலில் பரவியுள்ள வைரஸ் சுவரை உடைக்கும். காலை 11:00 மணிக்கு முருங்கை கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு சூப் அல்லது ரசம் வைத்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள புரோட்டீனை எடுக்க விடாமல் வைரசை தடுக்கும். இதனால் வைரஸ் பெருக்கம் குறையும் என அவர் தெரிவித்தார்.
தினமும் மாலை 4 மணிக்கு கபசுர குடிநீர் குடிக்கலாம். இரவு 7 மணிக்கு கிராம்பு, பட்டை, ஏலக்காய் தலா ஒன்று, ஓமம் கால் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதில் லவங்க பட்டை ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். இதன்மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என சித்த மருத்துவர் சுவாமிநாதன் கூறினார்.
newstm.in