இதுதான் சார் காதல்.. தடைகளை தாண்டி கால்கள் செயலிழந்த காதலியை கரம்பிடித்த இளைஞர் !

இதுதான் சார் காதல்.. தடைகளை தாண்டி கால்கள் செயலிழந்த காதலியை கரம்பிடித்த இளைஞர் !

Update: 2021-04-05 09:49 GMT

கர்நாடகா மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டத்தில் உள்ள பக்தரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மனு என்ற இளைஞரும் ஸ்வப்னா என்ற இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய மனு, குடும்ப சூழல் காரணமாக அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டே தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.  

இந்நிலையில் ஸ்வப்னாவின் இரு கால்களும் திடீரென செயல் இழந்ததால் அவரால் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மனு, ஷோபனாவை அழைத்துக் கொண்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். எனினும் அவரை எந்த மருத்துவராலும் குணமாக்கமுடியவில்லை. இதனால் ஸ்வப்னா தன்னை தவிர்த்து வேறு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மனுவை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதனை ஏற்காமல் மனு தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இந்த காதல் ஜோடிகளின் திருமணத்தை அக்கிராமமே கூடி சேர்ந்து நடத்தி வைத்துள்ளது. இந்த திருமணம் அந்த கிராமத்தில் வைத்து விமர்சியாக நடைபெற்றது. ஸ்வப்னாவால் தற்போது எழுந்து நடக்க முடியாத சூழல் இருந்தாலும் எந்த காரணத்திற்காகவும் தான் அவரை கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.  

பல்வேறு தடைகளை கடந்து தனது காதலில் வெற்றி பெற்று திருமணம் செய்து கொண்ட இந்த இளம் ஜோடிகளின் காதல் அனைவரையும் வியக்க வைக்கிறது. மேலும் பலரும் இதனை சமூக வலைதளங்களில் அறிந்து அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News