அனைத்து ஊழியர்களுக்கும் இது கட்டாயம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
அனைத்து ஊழியர்களுக்கும் இது கட்டாயம்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சார்பில் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 31-ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக தற்போது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் போது முகக்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது; 'அலுவலகங்களில் பணிபுரியும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
அறிகுறி உள்ள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 300 நபர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும். பணியிடங்களில் ஒரு நபருக்கு இடைவெளி 2 மீட்டர் உள்ளபடி பணி இடத்தை மாற்றி அமைத்திட வேண்டும். மேலும், கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளது.