இதை ஃபாலோ பண்ணுங்க தொந்தி காணாம போய்டும்…

தொப்பை குறையணும்னு உணவு கட்டுப்பாடோடு இருந்தா மட்டும் போதாது. வேகமாக குறையணும்னா இந்த சின்ன சின்ன விஷயங்கள்லயும் கவனம் செலுத்தணும். என்னென்ன தெரிஞ்சுக்கங்க..

Update: 2020-02-18 02:42 GMT

தொப்பை குறையணும்னு உணவு கட்டுப்பாடோடு இருந்தா மட்டும் போதாது. வேகமாக குறையணும்னா இந்த சின்ன சின்ன விஷயங்கள்லயும் கவனம் செலுத்தணும். என்னென்ன தெரிஞ்சுக்கங்க..

                                                 

படிக்கட்டு தான்
வீட்டில் இருந்தாலும் வெளியே சென்றாலும் மாடி ஏறணும்னா குறிப்பா ஆஃபிள் நாலாவது மாடியில் இருந்தாலும் படிக்கட்டில் ஏறுங்க. முதல்ல மூச்சிரைக்கதான் செய்யும். ஆனா போக போக பழகிடும். அப்புறம் உடம்பு குறைய குறைய படி ஏறுவதும் சுலபமாயிடும்.

                                                  

நடந்து பழகுங்க
வீட்லேந்து வெளிய போனாலே வண்டி தான். அது பைக், கார், ஆட்டோன்னு எதுவாவும் இருக்கலாம். ஆனால் தொந்தி குறைய நினைப்பவர்கள் பக்கத்து தெருவில் இருக்கும் கடைகளுக்கு போவதாக இருந்தால் கூட பைக்- தேடறதை விட்டு நடந்து போங்க. முதல்ல உங்க தொந்தியை தான் பார்க்க முடியும். ஆனா போக போக தொந்தி குறையறதையும் பார்க்கலாம்.

                                                 

சாப்பிடுவதை நிறுத்தாதீங்க
சாப்பிட்டே இருக்கணும்னு அர்த்தமில்ல. நாள் ஒன்றுக்கு மூன்று வேளையை இரண்டா குறைச்சிட்டா போதும்னு நினைக்கவேண்டாம். மூன்று வேளையும் பசி இல்லன்னாலும் சாப்பிடறதை நிறுத்தாதீங்க. பசி எடுக்கும் வரை காத்தி ருந்தீங்கன்னா அப்புறம் அதிகமா சாப்பிடுவீங்க. இன்னும் எடை அதிகமாயிடும்.

                                                   

உடற்பயிற்சி அவசியம்
தினமும் தண்டால் எடுக்கணும்னு அவசியமில்ல. ஆனா வாரம் ஒருமுறையாவது உடற்பயிற்சி செய்யுங்க. உட்காரும் போது தரையில் சம்மணமிட்டு உட்காருங்க. நிற்கும் போது நேரா நில்லுங்க. உட்காரும் போது கம்பீரமா உட்காருங்க. எல்லாத்தையும் விட முக்கியம் கீழ பொருள் விழுந்தா குனிஞ்சு நிமிர்ந்து எடுக்க பழகுங்க.

இதெல்லாம் நிறுத்துங்க
உடம்பை குறைக்கிறேன்னு ஒரு பக்கம் சாப்பாடை குறைச்சு மறுபக்கம் நொறுக்குத்தீனியை சாப்பிடாதீங்க. இது கொழுப்பை இன்னும் அதிகமாக்கும். அப்புறம் எந்த பயிற்சிக்கும் தொப்பை  மடியாது. இரண்டு மடங்கா அதிகரிக்கதான் செய்யும்.

இதெல்லாம் சின்ன சின்ன விஷயம் தான் அப்படின்னு சொல்லலாம்.  ஆனாலும்  இந்த மாதிரி விஷயம் தான் உடல் எடை குறைவதையும் தொப்பையில் கொழுப்பு சேர்வதையும் அதிகரிக்குது. இனி தொப்பையை கவனியுங்க. கூடவே எப்படி குறைக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டிங்கல்ல. இனி அதையும் தொடருங்க..

newstm.in

Tags:    

Similar News