வன்முறையில் ஈடுபட இது போர் கிடையாது.. விவசாய சங்கங்கள் அறிவுறுத்தல் !
வன்முறையில் ஈடுபட இது போர் கிடையாது.. விவசாய சங்கங்கள் அறிவுறுத்தல் !
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் மிக அமைதியான முறையில் நடந்து நிலையில், அதற்கு கரும்புள்ளியாக அமைந்தது குடியரசு தினத்தன்று டெல்லியில் ஏற்பட்ட வன்முறை.
இந்த வன்முறையில், விவசாயிகள் போலீசார் என இரண்டு தரப்பிலுமே கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. வன்முறை ஏற்படாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டெல்லி எல்லையில் குறிப்பிட்ட இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு ஜனவரி 31 ஆம்தேதி இரவு 11 மணிவரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க வன்முறையால் ஏற்பட்ட மனக் கசப்புகளை போக்கும் வேலைகளில் விவசாய சங்கங்கள் ஈடுபட்டு வருகின்றன. போராட்டக்களங்களில் அமைக்கப்பட்டுள்ள மேடைகளில் பேசுவோர் எந்த காரணத்தைக் கொண்டும் வன்முறையை தூண்டக் கூடாதுஎன விவசாய சங்க தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும், இது போராட்டம்தானே தவிர, போர் கிடையாது, கண்ணியம் காக்க வேண்டும் என்று மூத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் வன்முறை ஏற்பட காரணம், போராட்டத்தில் வெளியாட்கள் புகுந்ததே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, மீண்டும் வெளியாட்கள் யாரும் நுழைந்து விடாத வண்ணம் பாதுகாப்பு அரணை பலப்படுத்தும் வேலைகளிலும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in