இதுதான் தமிழ்நாடு! ஆளுநர் வந்த போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!!

இதுதான் தமிழ்நாடு! ஆளுநர் வந்த போது ஒலித்த “திராவிட நாடு வாழ்க” பாடல்!!

Update: 2022-01-31 06:30 GMT

மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த போது, அங்குவாழ்க திராவிடம், திராவிட நாடு வாழ்கஎன்ற பாடல் பாடப்பட்டது.

மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினத்தையொட்டி நேற்று சென்னை மெரினாவில் உள்ள காந்தியின் திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

இதற்காக நிகழ்விடத்திற்கு வந்த அவர் காரிலிருந்து இறங்கி சென்ற பொழுது, “வாழ்க வாழ்க திராவிடர்; வாழ்க திராவிட நாடு; வாழ்க!” என்ற பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலை சர்வதேச இசை சங்கம் குழுவினர் மற்றும் பள்ளி மாணவிகள் பாடினர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வரும்பொழுது `மகாத்மா காந்தி வாழ்க; பாரத நாடு வாழ்கஎன்ற பாடல் ஒலிபரப்பானது. ஆளுநர் வருகை தரும் போது திராவிட நாடு பாடல் வெளியானது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

newstm.in

Similar News