பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு ராஜூ செய்த முதல் காரியம் இதுதான்!!
பிக் பாஸ் வெற்றிக்கு பிறகு ராஜூ செய்த முதல் காரியம் இதுதான்!!
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜூ தனது வெற்றிக்கு பிறகு செய்த முதல் காரியம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலகாலமாக நடைபெற்று முடிந்தது. ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு கடைசியாக 5பேர் இறுதிப்போட்டியாளராக இருந்தனர்.
அதில், ராஜூ வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் பிரியங்கா ரன்னராகவும், பாவனி இரண்டாவது ரன்னராகவும், அடுத்தடுத்த இடங்களை அமீர் மற்றும் நிரூப் பெற்றனர்.
ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்ட ராஜூவுக்கு 50 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சென்ற ராஜூ, அடுத்த நாளே தனது அம்மாவிற்கு புடவை ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் ஆதாரவற்றோர் இல்லம் சென்று கணிசமாக தொகை ஒன்றையும் அளித்துள்ளார். ராஜூவின் இந்த செயல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
newstm.in