இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் மிகக்கொடிய வைரஸாக மாறியிருக்கிறது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், இன்று வரை இதற்கு தீர்வு தரக்கூடிய தடுப்பு மருந்தை கண்டறியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது. இதுவரை  34,500 பேர் இந்த கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

                                             

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வ பெயரை வெளியிட்டுள்ளது சீனா அரசு. கொரோனா வைரஸு புதிய பெயர் "நோவல் கொரோனா வைரஸ் பினேமோனியா (Novel Coronavirus Pneumonia - NCP) என தெரிவித்துள்ளனர். 
. 
 

newstm.in

Tags: