நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான்! நிபுணர் குழு அறிக்கை!

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான்! நிபுணர் குழு அறிக்கை!

Update: 2021-02-02 15:45 GMT

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சீரியல் நடிகை சித்ரா கடந்த மாதம் 9ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் விசாரணையை தொடங்கினர். திருமணமாகி இரண்டே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும் சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர், நடிகைகள், பணியாளர்கள், உறவினர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கை மாற்றம் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின்னர் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்றும், சின்னத்திரை நடிகை சித்ரா, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 5-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Tags:    

Similar News