சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ் ஒத்திவைப்பு- காரணம் இதுதான்..!!
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ் ஒத்திவைப்பு- காரணம் இதுதான்..!!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினயா ராய், ப்ரியங்கா அருள் மோகன், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள நிலையில், முன்னதாக டாக்டர் படம் வரும் 26-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வந்ததை அடுத்து, இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
Dear all, we will come out with the release date soon. As always keep showering your love and support 😇#DOCTOR@Siva_Kartikeyan | @Nelsondilpkumar | @KalaiArasu_ | @kjr_studios | @anirudhofficial | @priyankaamohan | @KVijayKartik | @nirmalcuts | @SonyMusicSouth https://t.co/fhqaP6BZdL
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 9, 2021
அதன்படி டாக்டர் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 26-ம் தேதி டாக்டர் படத்தை வெளியிட நாங்கள் உற்சாகத்தோடு இருந்தோம். ஆனால் விரைவில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்காரணமாக படத்திற்கு தொடர்புடையவர்களின் நலன் மர்றும் ரசிகர்களை மனதில் வைத்து டாக்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது.
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ள புதிய தேதி அறிவிக்கப்படும். டாக்டர் படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவு மற்றும் ஊக்கத்தை தொடர்ந்து வழங்கவேண்டும் என அன்புடன் கோரிகை வைக்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.