டிவி சேனலில் நேரடியாக வெளியாகும் கதிர் படம்- காரணம் இதுதான்..!

டிவி சேனலில் நேரடியாக வெளியாகும் கதிர் படம்- காரணம் இதுதான்..!

Update: 2021-03-15 12:48 GMT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவுள்ள கதிர் நடித்துள்ள சர்பத் படம் நேரடியாக டிவி சேனலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருக்கான அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கதிர். விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்பத்.

இந்தபடத்தை 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்தை பிராபகரன் என்பவர் இயக்கியுள்ளார். சர்பத் படத்தின் மூலம் ரகசியா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்பத் படத்திற்கான அனைத்து தயாரிப்பு பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை நேரடியாக டிவி சேனலில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, சமுத்திரகனி நடித்த ஏலே படங்கள் நேரடியாக டிவியில் வெளியாகின.

அதற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பு தயாரிப்பு நிறுவனங்களிடம் கவனமீர்த்துள்ளது. அதனால் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்பத்’ படத்தையும் டிவியில் வெளியிட இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித்குமார், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கலர்ஸ் தமிழ் டிவியில்தான் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல் ஆக நேரடியாக வெளியாக உள்ளது. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி சர்பத் திரைப்படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் டிவியில் வெளியாகிறது.


 

Tags:    

Similar News