பீதியில் வேலூர் மாவட்ட மக்கள்… காரணம் இதுதான்!!
பீதியில் வேலூர் மாவட்ட மக்கள்… காரணம் இதுதான்!!
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. அந்த நில அதிர்வு வேலூருக்கு தெற்கு - தென்மேற்கில் 59.4 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும், 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அரசு தெரிவித்தது.
இந்நிலையி ல் டிசம்பர் 23ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் பிற்பகல் 3.14 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
அந்த நில அதிர்வு வேலூருக்கு மேற்கு - வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நில அதிர்வானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் மூன்று வினாடிகள் நீடித்த நில அதிர்வினை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில் வருவாய் விசாரணை மேற்கொண்டனர்.
newstm.in