தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக வெளிநாட்டுக்கு பறந்த விஜய்- காரணம் இதுதான்..!
தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக வெளிநாட்டுக்கு பறந்த விஜய்- காரணம் இதுதான்..!
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மிகவும் மாஸாக சைக்கிளில் வந்து வைரல் செய்த நடிகர் விஜய், வாக்குப்பதிவு முடிந்த அடுத்த கணமே வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இதுதொடர்பான விபரங்களை அறியலாம்.
நடிகர் விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு ‘தளபதி 65’ என்று படக்குழு குறிப்பிட்டு வருகிறது.இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அதற்காக அவருக்கு ரூ. 2.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தளபதி 65 படத்திற்கான பூஜை சென்னை பெருங்குடியில் நடைபெற்றது. அதில் விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருந்த படக்குழுவினர், வாக்குப்பதிவு முடிந்தவுடன் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்திற்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி நடிகர் விஜய் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜியார்ஜியா புறப்பட்டார்.
Off to Georgia ✈️ @actorvijay pic.twitter.com/EJQcyNmzUR
— Lokesh (@LokeshJey) April 7, 2021
அங்கு அவர் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. பத்து நாட்களில் மீண்டும் சென்னைக்கு திரும்பும் விஜய், அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கான தயார் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in