வலிமை பட போஸ்டர் வெளியீட்டு தேதி இதுதான்...! அடுத்து உடனே வெளியாகிறது டீசர்..!!

வலிமை பட போஸ்டர் வெளியீட்டு தேதி இதுதான்...! அடுத்து உடனே வெளியாகிறது டீசர்..!!

Update: 2021-03-04 15:41 GMT

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஹெச். வினோத் இயக்கி வரும் இந்த படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷுட்டிங் பாக்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்வதற்கு விசா கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இதனால் படக்குழு காத்திருப்பில் உள்ளன. விரைவில் விசா கிடைக்கும் பட்சத்தில் அது எந்த நாடாக இருந்தாலும் உடனே வெளிநாடு பறந்திட வலிமை படக்குழு ஆயத்தமாகவுள்ளது.

இந்நிலையில் படத்திற்கான போஸ்டர் டிசைன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. அதில், செலக்ட்  செய்யப்பட்ட 10 போஸ்டர்களை அஜித்திடம் காண்பித்துள்ளது படக்குழு. அனைத்துமே அஜித்துக்கு பிடித்துள்ளது என்றாலும், அதில் ஒன்று மட்டும் தான் வெளியிடப்படவுள்ளது. போனி கபூர் சாய் பாபா பக்தர் என்பதால் வரும் 25-ம் தேதி வியாழக்கிழமை வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிடுகிறது. அதை தொடர்ந்து டீசர் வெளியிடுவது குறித்த தகவலும் கிடைத்துள்ளது.

வரும் மே-1ம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள், அதை முன்னிட்டு வலிமை பட டீசர் வெளியிடப்படுகிறது. ஆனால் இங்கேயும் வியாழக்கிழமை செண்டிமண்ட் காரணமாக ஏப்ரல் 29ம் தேதியே வலிமை பட டீசர் இணையத்தில் வெளிவரவுள்ளது. அதற்குள் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை முடித்துவிட ஹெச். வினோத் திட்டமிட்டுள்ளார். அதை தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளிவரவுள்ளது. இந்தாண்டு கோடை விடுமுறைக்குள் ‘வலிமை’ படத்தை திரையில் காணலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 


 

Tags:    

Similar News