உதவி செய்ய நினைச்சதுக்கு இது எனக்கு தேவைதான்- புலம்பி தவிக்கும் சனம்..!

உதவி செய்ய நினைச்சதுக்கு இது எனக்கு தேவைதான்- புலம்பி தவிக்கும் சனம்..!

Update: 2021-02-22 16:48 GMT

பிரபல நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்ட ட்விட்டரில் பதிவிட்ட சனம் ஷெட்டிக்கும், கமெண்ட் செய்த ரசிகருக்கும் இடையில் நடந்த விவாதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களிடம் நற்பெயரை சம்பாதித்தவர் சனம் ஷெட்டி. யாரும் எதிர்பாராத வகையில் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவருக்காக சமூகவலைதளங்களில் எழுந்த ஆதரவு தேசியளவில் டிரென்டிங் செய்தியானது.எனினும், அதிருப்தி அடைந்த ரசிகர்களுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறினார் சனம். அதை தொடர்ந்து ரசிகர்கள் சாமாதானம் அடைந்தனர். சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள துணை நடிகை சிந்துவுக்கு பண உதவி தேவை என ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருந்தார்.


அதை தொடர்ந்து மக்களிடம் இருந்து பல்வேறு வகையில் உதவிகள் வந்து சேர்ந்தன. இதற்கிடையில் ரசிகர் ஒருவர், சிந்துவின் மேல்சிகிச்சைக்கான தொகை மிகவும் குறைவு தான், நீங்கள் என முழு தொகையையும் தரக்கூடாது என கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த சனம், என்னுடைய உதவியை நான் செய்துவிட்டேன். முடிந்தால் நீங்கள் உதவுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். அந்த கமெண்ட் தற்போது பலரால் ஷேரிங் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடிகை சனமிற்கு ஆதரவு தெரிவித்து பலரும் ட்விட்டரில் அந்த ரசிகரை காய்ச்சி வருகின்றனர். 


 

Tags:    

Similar News