இந்த முறை வேற மாதிரி.. பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியானது- வீடியோ !!

இந்த முறை வேற மாதிரி.. பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியானது- வீடியோ !!

Update: 2021-09-04 09:35 GMT

பிக் பாஸ் 5ம் சீசன் லோகோ சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதனால் அதன் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது முழு ப்ரோமோ வீடியோ வெளிவந்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதில் கமல்ஹாசன் ஒரு கல்யாண வீட்டில் இருப்பது போல காட்டப்பட்டது உள்ளது.

காலை ஆறு மணிக்கு மேள தாளத்துடன் வரவேற்பு, அதன் பின் மதியம் எல்லாரும் செல்பி என குடும்பமே ஒன்றாக இருக்கிறது. அதன் பின் மதியத்திற்கு மேல் மாப்பிள்ளை பற்றி பெண் வீட்டார் சிலர் குறை சொல்ல, அதன் பின் சாப்பாடு பற்றி மாப்பிள்ளை வீட்டார் குறை சொல்ல ஒரு பெரிய சண்டையே நடக்கிறது.

ஆயிரம் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணத்திலேயே இவ்ளோ கலாட்டா நடக்கும். இங்கேயே இப்படினா.." என சொல்லி பிக் பாஸ் வீடு எப்படி இருக்க போகிறது என மறைமுகமாக கேட்கிறார் கமல்.

வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடுவில் வரும் பிரச்சனைகள் பற்றி சித்தரித்து இப்படி வெளியாகி இருக்கும் ப்ரொமோ வைரல் ஆகி இருக்கிறது.  


newstm.in

Tags:    

Similar News