இந்தாண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - ஜூன் மாதம் தொடங்குகிறது !!
இந்தாண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - ஜூன் மாதம் தொடங்குகிறது !!
தமிழ் நாட்டின் ஐபிஎல் என்று அனைவராலும் அழைக்கப்படும் போட்டி தான் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி.மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்குபெரும். டிஎன்பிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோத வேண்டும் .புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு (‘பிளே-ஆப்’ சுற்றுக்கு) தகுதி பெறும்.இந்தாண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தினசரி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரண்டு ஆட்டங்கள் இருக்கும் நாளில் முதல் ஆட்டம் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் நாட்களில் காலை 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. தொடக்க ஆட்டம் நெல்லையிலும், இறுதிப்போட்டி சேலத்திலும் அரங்கேறுகிறது.
தொடக்க ஆட்டம் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் ஜூன் 4-ந் தேதி மோதுகின்றன.
டிஎன்பிஎல் 5 தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும் , இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 60 லட்சம் ரூபாயும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 40 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
newstm.in