சரி என்பவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..! - அர்ஜுன் சம்பத்

சரி என்பவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்..! - அர்ஜுன் சம்பத்

Update: 2021-06-26 11:58 GMT

“தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை, ஆலோசனைக் குழுத் தலைவர் என அழைக்கலாமா..? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக, மத்தியிலுள்ள பாஜக அரசை, 'மத்திய அரசு' என்று குறிப்பிடுவதை தவிர்த்து, 'ஒன்றிய அரசு' என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

அதே போல், ஸ்டாலினை முதல்வர் என்றுதான் அழைக்க வேண்டும் என்பது சட்டம் அல்ல; அவரை ஆலோசனைக் குழுத் தலைவர் என்றும் அழைக்கலாம். அவர், கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் குழுவின் தலைவர்தான். இறுதி முடிவு கவர்னரிடம்தான் உள்ளது.

இதை நான் சொல்லவில்லை; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு - 163 சொல்கிறது. அதனால், இனிமேல் சட்டப்படி, 'ஆலோசனைக் குழுத் தலைவர் ஸ்டாலின் அவர்களே' என அழைக்கலாம். 'ஒன்றிய அரசு' சரி என்று ஏற்றுக்கொள்பவர்கள், இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News