வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!!

Update: 2022-01-31 09:32 GMT

சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் இரு சக்கர வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

வண்டலூர் பூந்தமல்லி செல்லும் புறவழிச்சாலையில், மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் சாலையோரத்தில்  லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது

இந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நாகல்கேணியை சேர்ந்த கோபிநாத் (37), அவரது மகன் கிரி (9), மகள் மோனிகா (7) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மூவருக்கும் தலை மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி ஓட்டேரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் அவர்களின் இருப்பிடம் குறித்து விசாரித்ததில், அவர்கள் மூவரும் கோவளம் கடற்கரைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

லாரியை சாலையோரம் நிறுத்து விட்டு டீ கடைக்கு சென்ற லாரி ஓட்டுனர் தப்பிச் சென்றதை அடுத்து போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

newstm.in

Similar News