ஹைடெக் முறையில் திருடும் மூன்று சகோதரிகள் - உஷார் மக்களே!
கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது 10 பேரிடம், 35 சவரன் நகை திருடப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது
கோவையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரிகள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது 10 பேரிடம், 35 சவரன் நகை திருடப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் சுற்றி வந்த மூன்று பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட, சென்னை திருவான்மியூரை சேர்ந்த செல்வி, பராசக்தி, இந்துமதி ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹைடெக் முறையில் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதலி்ல் கோவில் திருவிழாக்கள் குறித்து இணைய தளத்தில் தகவல் திரட்டுகின்றனர். தொடர்ந்து விழாக்கள் நடைபெறும் பகுதிக்கு சென்று நோட்டமிட்டு, கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு நிகழ்வின் போதும் இவர்கள் நகைத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட 10 சவரன் நகையுடன் தலைமறைவாகியுள்ள இந்துமதியின் கணவர் பாண்டியராஜனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
newstm.in