திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா.. அக்டோபரில் தொடக்கம்.. இப்போது ஆன்லைன் முன்பதிவு இல்லை !

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா.. அக்டோபரில் தொடக்கம்.. இப்போது ஆன்லைன் முன்பதிவு இல்லை !

Update: 2021-09-18 08:15 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருமலை அன்னமைய்யா பவனில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பிரம்மோற்சவ விழா குறித்து பல்வேறு  முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறும்போது, கொரோனா 3ஆவது அலை அச்சுறுத்தல் இருப்பதால் இம்முறையும் பிரம்மோற்சவ விழா வாகன சேவைகள் இன்றி, ஏகாந்தமாக கோவிலுக்குள் நடத்தப்படும். 

பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகளின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு இம்முடிவு தீர்மானிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் தொடரும் வரை பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதனால்தான் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன் வழங்கும் திட்டம் தாமதமாகிறது. விரைவில் இப்பிரச்சினை சரி செய்யப்படும். அதன் பின்னர் ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

newstm.in

Tags:    

Similar News