அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் வரும் பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதத்திலேயே, பொது விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகைகள் என்று 16 நாட்கள் வங்கிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் தனியாக உள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப் படி, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் மாநில வாரியாக பொருந்தும். பிப்ரவரி 6, 13, 20, 27 ஆகிய தினங்களில் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கம்போல வங்கிகள் இயங்காது. அதேபோல, பிப்ரவரி 12, 26 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

பிப்ரவரி 2022 க்கான வங்கி விடுமுறை பட்டியல்:

விடுமுறை தேதி    விடுமுறை

  • பிப்ரவரி 2, 2022    சோனம் லோச்சார் (கேங்டாக்)
  • பிப்ரவரி 5, 2022    சரஸ்வதி பூஜை/ ஸ்ரீ பஞ்சமி/ஸ்ரீ பஞ்சமி பசந்த் பஞ்சமி (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா)
  • பிப்ரவரி 6, 2022    ஞாயிறு
  • பிப்ரவரி 12, 2022    மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 16, 2022    ஞாயிறு
  • பிப்ரவரி 16, 2022    முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள்/லூயிஸ்-நாகை-நி (இம்பால் நகரம்;  கான்பூர் மற்றும் லக்னோ நகரங்கள்)
  • பிப்ரவரி 16, 2022    குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்)
  • பிப்ரவரி 18, 2022    டோல்ஜத்ரா (கொல்கத்தா)
  • பிப்ரவரி 19, 2022    சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர்)
  • பிப்ரவரி 20, 2022    ஞாயிறு
  • பிப்ரவரி 26, 2022    மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 27, 2022    ஞாயிறு
  • அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும் வரும் பிப்ரவரி மாதத்தில், ஜனவரி 2022 இல் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

 newstm.in

Tags: