இன்று மதியம் 2 மணிக்கு.. இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி..!

இன்று மதியம் 2 மணிக்கு.. இந்தியா - தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி..!

Update: 2022-01-19 10:54 GMT

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணி தலைவராக லோகேஷ் ராகுல் முதன்முறையாக களம் இறங்குகிறார். டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர் அல்லது புவனேஷ்வர்குமார், அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பிரிட்டோரியஸ் அல்லது ஜார்ஜ் லின்ட், மார்கோ ஜான்சென், பெலக்வாயோ, இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

Similar News