இன்று தான் கடைசி நாள்.. கட்டாயம் செய்யுங்கள்.. இல்லையெனில் அக்கவுண்ட்ல பணம் இருக்காது ?

இன்று தான் கடைசி நாள்.. கட்டாயம் செய்யுங்கள்.. இல்லையெனில் அக்கவுண்ட்ல பணம் இருக்காது ?

Update: 2021-03-31 16:44 GMT

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2020-ம் ஆண்டில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்தது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக சொல்லப்பட்டிருந்தது. 

ஆதார் கார்டையும் (Aadhaar Card), பான் கார்டையும் (PAN Card) 2020 மார்ச் 31-க்குள் இணைக்காமல் விட்டுவிட்டால், அவரின் பான் எண்ணை வருமான வரித்துறை செயலிழக்கச் செய்துவிடும் (Deactivate). எப்போது அவர் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கிறாரோ அப்போதுதான் அவரின் பான் எண் செயல்படுத்தப்படும் (Activate). 

எனவே, உங்கள் பான் நம்பரை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது வரும் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கு முன்பே வருமானது வரித்துறையானது பலமுறை கெடு விதித்திருந்தது? உங்கள் பான் நம்பரை ஆதாருடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போகும். கூட 1000 ரூபாய் அபாதாரமும் விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.ஏற்கனவே பல முறை போதிய அவகாசம் கொடுத்த நிலையில் மீண்டும் அவகாசம் அளிக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

ஆதார் பான் எண் இணைக்காவிடில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேறு பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பான் கார்டை 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பணபரிமாற்றத்துக்கு பான்கார்டை பயன்படுத்தும் போது அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். ஆக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காத பான்கார்டு முடக்கப்படும். எனினும் ஆதார் எண்ணை இணைத்தால் மீண்டும் செயல்பட தொடங்கி விடும்.

மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் எண் பான் எண் இணைக்கலாம். இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

newstm.in

Tags:    

Similar News