இன்று இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்!

இன்று இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்!

Update: 2021-03-25 07:54 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று(மார்ச் 24) பெட்ரோல் லிட்டர் 92.95 ரூபாய், டீசல் லிட்டர் 86.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், (மார்ச் 25) இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ.92.77-க்கும், டீசல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.86.10-க்கும் விற்பனை விற்பனையாகிறது.

Tags:    

Similar News