இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் தமிழகம், கேரளா,புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த கருத்துக் கணிப்பு உண்மை தன்மை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்.