கொரோனா வைரஸின் 2ஆவது அலை ஒட்டுமொத்தமாக இந்திய நாட்டை புரட்டிப்போட்டு வருகிறது. வடமாநிலங்களில் நாள்தோறும் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் சடலங்களை எரிக்க மின்மயானங்கள் இல்லை. இதனால் சாலையோரங்களிலும் ஆற்றின் கரையோரங்களிலும் எரித்து வரும் கொமை தொடர்கிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் உயிரிழப்பும் அதிகரித்து உயர்ந்து வருகிறது. 

இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதேபோல் பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை முழுதும் நிரம்பி விட்டது என்றும் கூறப்படுகிறது. படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

அண்மையில் மருத்துவமனையில் பெட் இல்லாததால் மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸிலேயே கிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது.

newstm.in


 

Tags: